• Mon. Apr 21st, 2025

பட்டாசு அட்டை தயாரிக்கும் கம்பெனியில் திடீர் தீ விபத்து..,

விருதுநகர் அருகே தனியார் பட்டாசுகளுக்கு அட்டை தயாரிக்கும் குழாய் கம்பெனியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் உற்பத்தி சாதனங்கள் எரிந்து சேதமடைந்தன. விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த அற்புதராஜ் என்பவருக்கு ஆர்.ஆர் நகர் அருகே கோவிந்தநல்லூரில் சொந்தமாக பட்டாசுகளுக்கு தேவையான அட்டை குழாய் தயாரிப்புக்கும் கம்பெனி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் அட்டை குழாய் கம்பெனியில் பணிகள் நடைபெற்றால் இருந்து நிலையில் இன்று மதியம் திடீரென தீ பற்றி எரிந்து கரும்புகை வெளியானது. தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த விருதுநகர் தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் கம்பெனியில் இருந்த பல லட்சம் மதிப்பிலான உற்பத்தி சாதனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. மேலும் தகர செட் மற்றும் மேற்கூரை இடிந்து தரைமட்டமாகியது. இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.