• Wed. Apr 24th, 2024

காரில் கடத்தப்பட்ட காதல் தம்பதியை மீட்ட பொதுமக்கள்

காதல் திருமணம் செய்த ஜோடியை, பெண்ணின் பெற்றோரே காரில் கடத்திய நிலையில், அவர்களை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவை லட்சுமி மில் சிக்னலில் நின்று கொண்டிருந்த காரில் இருந்து உதவி கேட்டு கதறல் சப்தம் கேட்டது . வாகனத்தில் இருந்து இறங்க முயன்ற இளைஞரை பிடித்து உள்ளே தள்ளிக்கொண்டு இருந்தனர் .
இதனையடுத்து சக வாகன ஓட்டிகள் உடனடியாக அந்த காரினை மறித்து அதில் இருந்தவர்களை இறக்கினர் . காரில் இருந்து இறங்கிய தம்பதி தங்களை காரில் நடத்துவதாகவும் , காப்பாற்றும்படியும் கதறினர் .

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர் . அவர்கள் மணியகாரம்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வர் மற்றும் சினேகா என தெரியவந்தது.

சமீபத்தில் காதல் திருமணம் நடைபெற்றதாகவும், சரவணம்பட்டி காவல் நிலையத்தில் பெற்றோர் அழைத்து இருவரும் மேஜர் என்பதால் தொந்தரவு செய்யக்கூடாது என காவல்துறையினர் அறிவுறுத்தி அனுப்பியதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் பெண் வீட்டார் சமரசமாகி விட்டதாக கூறி கோவிலுக்கு செல்லலாம் என கூறி ஏமாற்றி தங்களை எங்கோ கடத்தி செல்வதாகவும், தங்களை பெற்றோர் கொன்று விடுவார்கள் எனவும் கதறினர்.

காரில் கத்தியை கழுத்தில் வைத்து தங்களை மிரட்டியதாகவும், தங்களை காப்பாற்றும் படி போக்குவரத்து போலீசாரின் காலில் விழுந்து கதறினர். இதனையடுத்து உடனடியாக ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த காவல்துறையினர் காதல் ஜோடியை அவர்களிடம் ஒப்படைத்தனர். ஏற்கனவே இந்த காதல் விவகாரம் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டது என்பதால் தம்பதியையும், பெண்ணின் பெற்றோரையும் சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *