

மின்சார ஒயர் துண்டிக்கப்பட்டதால் நாகர்கோவில் -திருவனந்தபுரம் ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குழித்துறை அருகே விரிகோடு என்ற இடத்தில் மின் கம்பத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாக மின் வயர் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு, மதுரையிலிருந்து கொல்லம், குருவாயூரியிலுருந்து சென்னை செல்லும் ரயில்கள் முக்கிய ரயில்கள் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து ரயில்வே பணியாளர்கள் மின்கம்பம் மற்றும் மின் ஓயர்களை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை சரி செய்வதற்கு ஒன்று முதல் இரண்டு மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மின்சார ரயில்களில் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு ரயிலை இயக்கும் பணி நடைபெற்று வருகிறது.

