• Wed. Apr 24th, 2024

வில்லன் இல்லாமல் வெற்றி பெற்ற ஹீரோக்கள்

2020ஆம் ஆண்டும் கொரோனா தொற்றால் உலகத் திரையுலகம் பாதிக்கப்பட்டது. திரையரங்குகள் மூடப்பட்டன. திரைப்பட தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. 2021 ஜனவரி மாதத்திற்கு பின் திரையரங்குகளை திறக்க அந்தந்த மாநில அரசுகள் அனுமதி வழங்கத் தொடங்கின.

இந்த 2021ம் ஆண்டில் இரண்டு தமிழ்ப் படங்கள் உட்பட ஐந்து இந்தியப் படங்கள் உலக அளவில் சாதனை புரிந்துள்ளதாக சர்வதேச பாக்ஸ் ஆபீசில் பட்டியலிடப்பட்டுள்ளது

இந்தியில் ரோகித் ஷெட்டி இயக்கத்தில் அக்க்ஷய்குமார் நடித்த ‘சூர்யவன்ஷி’ படம் சுமார் 320 கோடி வரை வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படம் 240 கோடி ரூபாய் வசூலித்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்த ‘மாஸ்டர்’ படம் 230 கோடி வசூலித்து 3ம் இடத்தையும்,

வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்த ‘வக்கீல் சாப்’ தெலுங்குப் படம் 140 கோடி வசூலித்து 4ம் இடத்தையும்,

பொயப்பட்டி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த ‘அகான்டா’ படம் 120கோடி ரூபாய் வசூலைக் கடந்து இப்போதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படம் தற்போது 5ம் இடத்தில் இருந்தாலும் வசூல் கணக்கு மாறுகிறபோது நான்காம் இடத்திற்கு முன்னேறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய அளவில் வசூலில் முதல் ஐந்து இடங்களில் முதலிடத்தைத் தவிர அடுத்த இடத்தில் மாஸ்டர், அண்ணாத்த படங்கள் இடம்பிடிக்க காரணம் இந்தப் படங்கள் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. முதல் வாரம் முழுவதும் டிக்கெட் கட்டணம் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

விஜய், ரஜினிகாந்த் இவர்களின் ரசிகர்கள் தமிழகத்தில் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகளை தியேட்டர் நிர்வாகத்திடம் இருந்து மொத்தமாக வாங்கியதால் பெரும் தொகை வசூலிக்க காரணமானது. மாஸ்டர், அண்ணாத்த படங்கள் வெளியான நாளில் போட்டிக்கு வலிமையான படங்கள் வெளியாகவில்லை. குறிப்பாக இந்திய அளவில் பட்டியலிடப்பட்ட ஐந்து படங்களும் வெளியான நாளில் அதற்கு போட்டிக்கு வலிமையான, சமபலமுள்ள ஹீரோக்கள் நடித்த படங்கள் வெளியாகததால் சினிமா ரசிகன் பொழுதுபோக்கிற்கான ஒரே தேர்வாக ஒரு படம் மட்டுமே திரையரங்குகளில் இருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *