

சூர்யா மற்றும் பாலா இணையும் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பை சூர்யா இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
பாலா இயக்கத்தில் வெளியான ‘நந்தா’, ‘பிதாமகன்’ உள்ளிட்டப் படங்களில் நடித்த சூர்யா, தற்போது மூன்றாவது முறையாக இணையவிருக்கிறார்.

சமீபத்தில் பாலா இயக்கும் புதிய படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. இதில் அதர்வா நடிப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது சூர்யாவே அதில் நடிக்கிறார்.
இந்த செய்தியை ‘என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்…
ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்..
20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்…
அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்…
அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்…’ என தெரிவித்துள்ளார்.
மேலும் இதை பகிர்ந்து கொள்வதற்காக இயக்குனர் பாலா மற்றும் அவரது அப்பா சிவகுமாருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சூர்யா இயக்குனர் பாலாவுடன் 20 ஆண்டுகளுக்கு பிறகு இணைய உள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.
