

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகை அடகு வைத்து தருவதாக விக்னேஷ் என்பவர் சங்கர் மனைவி கமலி அவர்களிடம் நகைகளை பெற்று கடந்த மார்ச் மாதம் தனியார் நகை கடன் நிதி நிறுவனத்தில் அடகு வைக்க சென்ற போது, அவரிடம் 7 லட்சத்துக்கு நகை அடகு வைக்க முடியாது என்று நிதி நிறுவன மேலாளர் கூறியதைக் கேட்டு சங்கர் என்பவர் பெயரில் ரூ.7 லட்சத்திற்கு நகைகளை அடகு வைத்துள்ளனர்.
தற்பொழுது நேற்றைய தினம் கேட்டபொழுது வங்கியில் பணத்தை கட்டிவிட்டு வருமாறும், அதன் ரசீதை கொண்டு வருமாறும், தனியார் நிறுவன மேலாளர் கூறியதை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதமே நகைகளை திருப்பி விட்டதாகவும், தனியார் நிறுவன மேலாளர் விக்னேஷ் என்பவர் திரும்பி விட்டதாகவும் கூறி விட்டார். உடனே, கமலி மற்றும் அவர் குடும்பத்தினர் அவரை அலைக்கழித்த தனியார் நிறுவனத்தின் மீது திருமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
