

தொடர் மழை காரணமாக சென்னையில் நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை கோட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாத மழை பெய்து தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி வருகிறது.
பராமரிப்புப் பணி காரணமாக 09.11.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல் – சூளூர்பேட்டை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை – வேளச்சேரி பிரிவுகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி இயக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
