ஒரு இனம் புரியாத தளபதி ரசிகையின் கூற்று…இந்த கால கட்டத்தில் இப்படியும் ஒரு ரசிகையா என சமூக வலைத்தளத்தை திணறடித்த பெண்மனியாக வலம் வரும் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் விருதுநகர் மாவட்ட மகளிர் அணி தலைவியான ஜெகதீஸ்வரியிடம் நம் அரசியல் டுடே.காம்-ற்காக அவர் விஜயை சந்தித்ததைப் பற்றியையும் அவரது தந்தையின செயல்பாடுகள் குறித்தும்,விஜய்காக ஜெகதீஸ்வரி செய்த அர்ப்பணிப்புகளைப்பற்றி கூடுதலாக அறிய அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம் …
1.உங்களுக்கு தளபதி விஜய்யின் மீது இவ்வளவு அன்பு வரக்காரணம் என்ன?
அவரின் சேவை மனபான்மை என்னை ஈர்த்தது…நா
னும் அந்த சேவையில் கடந்த 5 வருடமாக ஒரு பாங்காக உள்ளேன்.அதுமட்டுமின்றிஅவரின் நடனம் பார்ப்போரை அசர வைக்கும் வண்ணம் அமைவதும் ஒரு காரணம்.
2.ஒரு ரசிகையா உங்கள நீங்க காட்டிக்க பச்ச குத்துனீங்களா அந்த விஷயத்தை ஏன் தேர்ந்தெடுத்தீங்க?
சர்கார் படத்தில் புகைப்பிடிக்கும் காட்சி தடை செய்யப்பட்டது. படத்தில் மட்டும் தடை செய்தால் போதுமா நிஜத்தில் அதற்கு லைசன்ஸ்-ம் உள்ளதே. அதன் காரணமாகவே நான் அதை சுட்டிக்காட்ட இந்த மாதிரி பச்சை குத்திக்கொண்டேன்.
3.தளபதி விஜய் அவர்கள நேரில் சந்தித்துள்ளீர்களா?
4 முறை அவரை சந்தித்துள்ளேன்…அவர்பார்த்ததும் இரண்டு கைக்கூப்பி நன்றாக உள்ளீர்களா அம்மா என்று தான் கேட்பார்..அதில் தங்கை அக்கா என்ற பன்பு தான் தெரியும்.அவரிடம் நிறைய மரியாதை கிடைக்கும் அது யாராக இருந்தாலும் சரி.
4.அவர பார்த்தபோது நீங்க கேட்ட முதல் விஷயம் என்ன?
அவரை பார்த்ததும் நான் திகைத்து நின்றேன் பேச்சு வரவில்லை…இவர் என் கண்ணுக்கு கருவறையில் இருக்கும் தெய்வம் போல் தான் தெரிந்தார்.அவர் என்னிடம் கேட்கிற கேள்விக்கு கூட பதில் கொடுக்க இயலவில்லை..
5.இந்த டாட்டூவ தளபதி பார்த்து என்ன சொன்னாறு?
ஒரு நிமிடம் என் கையைப்பார்த்து thanks என கூறினார்…ஆனால் என்னை நேரில் சந்திக்கும் முன்பே அவர் சமூகவலைத்தளத்தில் என் டாட்டூவை பார்த்துள்ளார்..ஒரு நேரத்தில் இந்த விஷயம் வைரலாக இருந்ததால் அவருக்கு தெரிந்தது..
6.உங்களின் சமூக சேவை பற்றி சில வார்த்தைகள்..
குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் உணவு வழங்குதல்…அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் இராஜபாளையம் அன்னை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு வழங்கி வருகிறோம்…இந்த சேவை அனைத்தும் எங்கள் தளபதி அண்ணனின் வழியிலே வந்தது…
7.எப்போதுலிருந்து நீங்கள் தளபதி விஜயின் ரசிகை?
சிறு வயதிலிருந்தே நான் தளபதி அண்ணின் மிகப்பெரிய ரசிகை…துள்ளாத மனமும் துள்ளும் படம் என்னை வெறித்தனமான ரசுகையாக்கியது.
8.தளபதி விஜயின் வளர்ச்சி பற்றி கூறுங்கள்?
அண்ணன் தன் சுய முயற்சியில் வளர்ந்து வந்தவர்..அவரின் தந்தை அவரை அறிமுகப்படுத்தி இருந்தாலும் முழுக்க முழுக்க தன் திறமையால் வளர்ந்தவர் தளபதி ..ஒரு பிள்ளையை வளர்த்து விடுவது பெற்றோரின் கடமை அதை தான் அவரது தந்தை செய்திருக்கிறார்…
அகில இந்திய தளபதி மக்கள் இயக்கத்தின் வழிகாட்டியாகவும் பொதுச்செயலாளர் புஸ்ஸி N. ஆனந்த் முக்கிய பங்கு வகிக்கிறார்.தளபதி விஜய் அண்ணன் திமுகவையும் அதிமுகவையும் ஓரங்கட்டி அரசியலில் களமிறங்க என்னுடைய வேண்டுதலும் உள்ளது..இவ்வாறு ஜெகதீஸ்வரி அவர்கள் கூறியுள்ளார்..