வன உயிரின வார விழாவையொட்டி நாகர்கோவிலில் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது
வன உயிரின வார விழா நேற்று தொடங்கி இம்மாதம் எட்டாம் தேதி வரை தொடர்ந்து ஒரு வாரகாலம் நடைபெறுகிறது இதனையொட்டி வன உயிரினங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகர்கோவிலில் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது நாகர்கோவில் மாவட்ட வன அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த சைக்கிள் பேரணியை மாவட்ட மாவட்ட வன அலுவலர் இளையராஜா கொடியசைத்து தொடங்கிவைத்தார மாவட்ட வன அலுவலர் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணி மீனாட்சிபுரம் கோட்டாறு செட்டிகுளம் சந்திப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பு பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு வடசேரி வழியாக மீண்டும் மாவட்ட வன அலுவலகம் வந்து சேர்ந்தது இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்

இது குறித்து மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறியதாவது வன உயிரின வார விழா நடைபெற்று வருகிறது இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலில் மாணவர்கள் பங்கேற்ற சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது வனத்தை அனைவரும் பாதுகாக்க வேண்டும் வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்