


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பேருந்து நிறுத்தத்தில் ஷேர் ஆட்டோக்கள் தஞ்சம் அடைந்துள்ளதால், அரசு பேருந்து நிறுத்தங்களில் நிறுத்த முடியாமலும், பயணிகள் பேருந்துகளில் ஏற முடியாமல் ஷேர் ஆட்டோக்கள் ஆங்காங்கே சாலையில் குறுக்கில் நிறுத்தப்பட்டு இருப்பதால், பெரும் அவதி அடைந்து வருவதுடன், காலை நேரங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலர்கள், கூலி தொழிலாளர்கள் பேருந்தில் ஏறுவதற்கு முயலும் போது, குறுக்கே ஷேர் ஆட்டோக்கள் விபத்துக்கள் ஏற்படுத்தும் வகையில் வந்து நிற்பதால், பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் கோவில் ஸ்டாப் நிறுத்தத்தில் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததும், அவர்களுடைய அலட்சியப் போக்கினால் பெரும் உயிரிழப்பு ஏற்படும் முன், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது உரிமத்தை வைத்துள்ளார்களா? எனவும் விதிமுறை மீறி ஆங்காங்கே நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


