


மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக கிளைக் கழக பூத்கமிட்டி கூட்டம் திருவாயநல் லூரில் நடந்தது. ஒன்றிய செயலாளர் எம்.காளிதாஸ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர் பி உதயகுமார் பூத் கமிட்டி கிளைக் கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம் வி கருப்பையா மாணிக்கம், எஸ் எஸ் சரவணன், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் ராஜேஷ் கண்ணா, வெற்றிவேல் மகளிர் அணி மாவட்ட செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசறை மாவட்ட துணை செயலாளர் மணிமாறன் வரவேற்றார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் விவசாய அணி வாவிட மருதூர் குமார் முடுவார் பட்டி ஜெயச்சந்திரன் மணியன் பொறியாளர் பார்த்திபன் தென்கரை நாகமணி குருவித்துறை காசிநாதன் மாவட்ட பிரதிநிதி முரளி திருவாலவாயநல்லூர் கிளைச் செயலாளர் சசிகுமார் துரைப்பாண்டி மாலிக் முத்துப்பாண்டி ஆண்டிபட்டி மணி
மணிகண்டன் கிருஷ்ணசாமி முத்துசாமி அழகர் மற்றும் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

