• Mon. Apr 21st, 2025

பெரியவர் கோயிலில் பூஜை செய்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார்.!

ByKalamegam Viswanathan

Apr 15, 2025

மதுரை காஞ்சி பெரியவர் கோயிலில் சுவாமிக்கு தானே தீபாராதனை செய்து, பூஜை செய்து வணங்கிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார்.!

அதிமுக பாஜக கூட்டணி உறுதியானதை தொடர்ந்து, மதுரை காஞ்சி பெரியவர் கோவிலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சிறப்பு வழிபாடு நடத்தினார். அப்போது அவர் காஞ்சி மகா பெரியவருக்கு தானே தீபாரதனை காட்டி பயபக்தியோடு வேண்டிக் கொண்டார்.

பாஜகவுடன் சேர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார். இந்த கூட்டணி அமைந்தால் வலுவான இடங்களில் வெற்றி பெறலாம் என்பதையும் அவர் தொடர்ச்சியாக சொல்லி வந்தார். இந்த நிலையில் அமித்ஷா தமிழ்நாடு வந்தபோது, கூட்டணி உறுதி ஆனது.

இதனைத் தொடர்ந்து, மதுரை எஸ்.எஸ். காலனியில் உள்ள காஞ்சி மகா பெரியவர் கோயிலுக்கு சென்ற ஆர்.பி.உதயகுமார், தானே தீபாராதனை செய்து வணங்கினார். பயபக்தியோடு அங்கு வேண்டிக் கொண்டவர் வருகிற சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற வழிபட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.