இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, ஒலிவியா மோரிஸ், சமுத்திரகனி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் வரும் மார்ச் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. 3டி தொழில்நுட்பத்திலும் இந்த படம் ரிலீஸ் ஆகப் போகிறது. சமீபத்தில் பெங்களூருவில் நடந்த பிரம்மாண்ட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கர்நாடக முதலமைச்சர் கலந்து கொண்டு படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்திருந்தார், என்பது குறிப்பிடத்தக்கது!
ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தை பார்க்க உலக ரசிகர்களே ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், கர்நாடக ரசிகர்கள் அந்த படத்தை கர்நாடகாவில் ஒரு தியேட்டரில் கூட ரிலீஸ் செய்யக் கூடாது என்றும் படத்தை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்றும் #BoycottRRRinKarnataka என்ற ஹாஷ்டேக்கை இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இதற்கு காரணமாக, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் கன்னட மொழியில் உருவாகாதது தான் இந்த எதிர்ப்புக்கு காரணம் என்கின்றனர். கன்னட மொழியை புறக்கணித்து விட்டு பான் இந்தியா படமென ராஜமெளலி பிரச்சாரம் செய்வதால் கன்னடர்கள் இந்த படத்திற்கு எதிரான எதிர்ப்பு குரலை கொடுத்து வருகின்றனர்.