• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஹீரோயின் இந்த நயன்தாரா இல்லையா? – ஜென்டில்மேன் 2 அப்டேட்!

1993ம் ஆண்டு அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி மற்றும் செந்தில் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் படத்தை கே.டி.குஞ்சுமோன் தயாரித்து இருந்தார். 30 ஆண்டுகளுக்கு பிறகு ஜென்டில்மேன் 2 படத்தை தயாரிக்கப் போவதாக திஅறிவித்தார் கே.டி. குஞ்சுமோன்.

இப்படத்திற்கு பாகுபலி, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த பிரபல டோலிவுட் இசையமைப்பாளர் மரகதமணி தான் இந்த படத்துக்கு இசையமைக்கப் போகிறார் என்றதும் படம் வேற லெவலில் பிரம்மாண்டமாக உருவாக போகிறது என்பது கன்ஃபார்ம் ஆகி இருந்தது.

அடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸாக லேடி சுப்பர்ஸ்டார் நயன்தாரா ஜென்டில்மேன் 2 படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போகிறார் என நேற்று கோலிவுட் முழுவதும் பரபரப்பு கிளம்பியது. நயன்தாரா ஹீரோயின் என்றால் ஹீரோ யார்? இயக்குநர் யார்? என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்த நிலையில், தற்போது கே.டி. குஞ்சுமோன் கொடுத்த ட்விஸ்ட் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

கையில் ரோஸ் கொடுத்து தோளில் கை போட்ட படி ஜென்டில்மேன் 2 படத்தின் ஹீரோயினை தற்போது அறிமுகப்படுத்தி இருக்கிறார் கே.டி. குஞ்சுமோன். நயன்தாரா சக்கரவர்த்தி இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க அவர்தான் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.