பாகுபலி படம் மூலமாக, மிகவும் பிரபலமானவர் இயக்குனர் ராஜமௌலி, மாஸ்டர் படம் குறித்து பேசியுள்ளார். ஆர்ஆர்ஆர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜமௌலியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
அதில் ஒன்று நீங்கள் சமீபத்தில் பார்த்து உங்களுக்கு பிடித்த தமிழ் திரைப்படம் எது..? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஜமௌலி, 4 வருஷமா எந்த படமும் பார்க்கவில்லை.. மாஸ்டர் படம் பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது…அனிருத் மியூசிக் எனக்கு பிடித்தது..” என கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது