மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி (குடோன்)செயல்பட்டு வருகிறது.

இங்கு பணிபுரிந்து வரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலவரையின்றி தொடரும் இப் போராட்டத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகம் தழுவிய அளவில் நடைபெறும் இந்த போராட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள 9 வாணிபக் கழக கிட்டங்கிகளிலும் போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால் பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் மூட்டைகள் ஏற்றி வந்த லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் லாரி தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிட்டங்கி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.





