இராஜபாளையத்தில் கலைஞர் 102வது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் ஜவஹர் மைதானத்தில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் இராஜபாளையம் தெற்கு நகர இளைஞர் அணி சார்பில், கலைஞர் 102 வது பிறந்தநாள் மற்றும் திமுக ஆட்சியில் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
33 வது வார்டு நகர்மன்ற உறுப்பினரும், தெற்கு நகர இளைஞர் அணி அமைப்பாளர் அருள் உதயம் தலைமையில் நடைபெற்றது. இராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் ராமமூர்த்தி மற்றும் வடக்கு நகர செயலாளர் மணிகண்ட ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், இராஜபாளையம் நகர மன்ற தலைவி பவித்ரா ஷாயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா மற்றும் ஹம்மத் நிஸ்ரின் கலந்து கொண்டு தமிழக அரசு செய்த நான்காண்டு சாதனைகளை எடுத்துரைத்தும், ஒன்றிய அரசு மக்களுக்கு செய்து வரும் துரோகத்தை எடுத்துரைத்தும் மு. க. ஸ்டாலின் தலைமையில் நான்காண்டு காலத்தில் மகளிர் ஊக்கத் தொகை, மகளிர் காண பேருந்து, மேலும் அரசு செய்த நான்காண்டு சாதனைகள் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாசறை ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
