
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா
துலுக்கன்குறிச்சியில் வாழைமர பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மாத கிருத்திகையை முன்னிட்டு பாலசுப்பிரமணியருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், திரவியபொடி, சந்தானம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், சிறப்பு யாகபூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.

