கூடலூர் நகராட்சியில் நிலவும் லஞ்ச ஊழலை கண்டித்து SDPI கட்சி சார்பாக கூடலூர் நகராட்சியின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை கட்சியின் நகரதலைவர் பிரோஸ்கான் தலைமையேற்று கண்டன உரை ஆற்றினார்.
நகர செயலாளர் ஷிஹாபுத்தீன் வரவேற்புரை ஆற்றினார் .நீலகிரி மேற்கு மாவட்ட பொது செயலாளர் சக்கீர் ஹுசைன் மற்றும் செயலாளர் ரபீக் SDTU மாவட்ட தலைவர் அப்துல் கபூர் செயலாளர் ரபீக் நகர கிளை நிர்வாகிகள். கலந்து கொண்டனர்.நகராட்சி அலுவலகத்தில் நிலவும் லஞ்ச ஊழலை ஒழித்து வெளிப்படையான நிர்வாகத்தை அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும் நகராட்சி யை நாடும் மக்களின் அடிப்படை தேவைகளை விரைந்து பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.