அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரும் எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் பதில் மனு அளித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரும் எடப்பாடி பழனிசாமி மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும் என பழனிசாமியின் இடையீட்டு மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில் மனு அளித்துள்ளது.
அந்த பதில் மனுவில், கடந்த ஜுலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போதைய சூழலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க இயலாது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக பழனிசாமியின் கோரிக்கை குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார்” என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.