• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவில் அருகே நடைபெறும் பாலப்பணிகள் தெற்கு மண்டல தலைவர் ஆய்வு

நாகர்கோவில் அருகே நடைபெற்றுவரும் பாலப்பணிகளை மாநகராட்சி தெற்கு மண்ட தலைவர் முத்துராமன் பார்வையிட்டு விரைந்து முடிக்க கோரிக்கை வைத்துள்ளார்.
நாகர்கோவில் மணக்குடி சாலையில் வெள்ளடிச்சிவிளை அருகே மற்றும் குளத்துவிளையில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் நிலை இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.75 லட்சம் செலவில் 4 சிறிய பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. குளத்துவிளையில் நடந்து வரும் பாலப் பணியை நாகர்கோவில் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் முத்துராமன் பார்வையிட்டார். போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இந்தப் பணியை விரைந்து முடிக்க அவர் கோரிக்கை வைத்தார்.