

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்தும் மாதம்தோறும் மின் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தக் கோரியும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சிமினி விளக்குகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம்.
மதுரை முனிச்சாலை பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை ரத்து செய்யப் கோரியும் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதி போல் மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை அமுல்படுத்த கோரியும் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் சிமினி விளக்கு உடன் தொலைக்காட்சி பெட்டி மற்றும் மின் விசிறிகளுக்கு மாலை அணிவித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில அரசை கண்டித்தும் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கூடிய கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய செயற்குழு உறுப்பினர் முஜ்பூர் ரஹ்மான், தமிழக அரசு கடந்த ஆட்சியாளர்களிடம் சொன்ன குற்றங்களை எல்லாம் தமிழக அரசு இன்று செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஒட்டுமொத்த தமிழக மக்களையும் பாதிக்கப்படக்கூடிய மின்கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
கடந்த ஆட்சியாளர்களை பார்த்து குற்றங்களை சுட்டி காட்டிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று ஆட்சிக்கு வந்தவுடன் இப்படிப்பட்ட சொத்து வரி வீட்டு வரி களை உயர்த்துவதும் மின்கட்டணங்களை உயர்த்துவது வன்மையாக எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. உடனடியாக இந்த மின்சார கட்டணத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் தெற்கு மாவட்டத்தின் சார்பாக இங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என தெரிவித்தார்.
