சென்னையில் இருந்து தேனிக்கு செல்வதற்காக மதுரை விமானநிலையத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். இந்நிலையில் தொண்டர்கள் அவரை வரவேற்றனர். அப்போது கட்சி தொண்டர் ஒருவரின் குழந்தைக்கு ஜெயவர்சினி என பெயரிட்டார். அப்போது முதல் குழந்தையின் பெயர் ஜெயலலிதா என கூறிய நிலையில் இரு குழந்தைகளுக்கும் பணம் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
மத்திய பட்ஜெட்டை முழுமையாக படித்து பார்த்துவிட்டு கருத்து சொல்கிறேன்.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு அமளி குறித்த கேள்விக்கு,
எதிர்க்கட்சிகள் அவர்கள் வேலையை நாடாளுமன்றத்தில் பார்க்கிறார்கள்.
பட்ஜெட்டில் திருக்குறள் இடம்பெற்றது குறித்த கேள்விக்கு,
திருக்குறள் உலகம் முழுவதும் பொதுவானது. உலகமே திருக்குறளை புரட்டிப்பார்க்கிறது.
தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது குறித்து கேள்வியெழுப்பியதற்கு பதிலளிக்காமல் செய்தியாளரை நீங்கள் எதிர்க்கட்சித்தலைவராகலாம் என பேசி சென்றார்.