மத்திய அரசு இந்த ஆண்டும் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு 1800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கடிதம் அனுப்பி உள்ளது. ஆனால் புதிய கல்வி கொள்கை திட்டத்தில் கையெழுத்து இட்டால் மட்டுமே நிதி விடுவிக்கப்படும் என்று கூறிவிட்டது.

இது தொடர்பாக வரும் ஏழாம் தேதி தமிழக முதல்வர் தலைமையில் கல்வித்துறை ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது இந்த பிரச்சனைக்கு அந்த கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது…. புதுக்கோட்டையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேட்டி,
புதுக்கோட்டையில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவு தேர்வு ஆய்வு கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. ஆட்சியர் அருணா பள்ளி கல்வித்துறை இயக்குனர் நரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்திலிருந்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் கடந்த ஆண்டு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் எதனால் குறைந்தது அடுத்த வருடம் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி எந்தெந்த வட்டாரத்தில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதோ அந்த வட்டாரத்தில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.
அடுத்த ஆண்டு மாவட்டத்தில் பள்ளி தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்தில் பொதுத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு பாடங்களில் மாணவர்கள தேர்வு எழுதுவதற்கு வராமல் உள்ள விகிதம் அதிகரித்து வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. எதனால் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு வருவது கிடையாது என்பது குறித்து கேட்டறியப்பட்டது.
கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது சென்ற தேர்வில் குறைந்த அளவு மாணவர்களே தமிழ் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு எழுத வரவில்லை.
படிப்படியாக இந்த விகிதம் குறைக்கப்பட்டுள்ளது இனிவரும் காலங்களில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கு உண்டான நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை எடுத்து வருகிறது.
தற்போது பொது தேர்வில் தேர்வில் எழுதாமல் உள்ள மாணவ மாணவிகளை சப்ளிமெண்ட் தேர்வில் தேர்வு எழுதுவதற்கு ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தி மாணவர்களை தேர்வு எழுத வைத்து வருகின்றனர்.
மாணவர்களை தேடி கண்டுபிடித்து கல்வியை விட்டு வெளியே செல்லாதவாறு அதிகாரிகள் பார்த்துக் கொள்கிறார்கள்.
மத்திய அரசு இந்த ஆண்டும் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு 1800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கடிதம் அனுப்பி உள்ளது. ஆனால் புதிய கல்வி கொள்கை திட்டத்தில் கையெழுத்து இட்டால் மட்டுமே நிதி விடுவிக்கப்படும் என்று கூறிவிட்டது.
இது தொடர்பாக வரும் ஏழாம் தேதி தமிழக முதல்வர் தலைமையில் கல்வித்துறை ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பிரச்சனைக்கு அந்த கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
சென்னையில் நடைபெற்ற முதன்மை கல்வி அலுவலக கூட்டத்தில் எத்தனை பள்ளிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தேவை என்பது குறித்து கேட்டு அறிந்துள்ளோம். கழிவறைகள் பள்ளி கட்டிடங்கள் ஆகியவை தேவை என்று கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கி மூலமாக அடிப்படை வசதிகள் பள்ளிகளுக்கு செய்யப்பட்டு வருகிறது.
பள்ளி மேம்பாட்டு திட்டம் என்ற திட்டத்திற்கு 7500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இதுவரை 5000 கோடி ரூபாய் மதிப்பில் கட்டடமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் கழிவறைகள் பள்ளி கட்டிடங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளது.