புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கத்தக்குறிச்சியில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த ஊரில் உள்ள சித்தி விநாயகர் அய்யனார் கோவில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு 32 ஆம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயமாக நடைபெற்றது.

29 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயமானது நடு மாடு, பெரிய மாடு, பூஞ்சிட்டு மாடு, கரிச்சான் மாடு, தேன்சிட்டு மாடு என ஐந்து பிரிவுகளாக பந்தயம் நடத்தப்பட்டது இதில் குறைந்தபட்சமாக ரூபாய் 15,001 முதல் அதிகபட்சமாக 50,001 ரூபாய் வரை முதல் பரிசாக வழங்கப்பட்டது. அனைத்து பிரிவுகளிலும் 5 பரிசுகள் வரை வழங்கப்பட்டன.

இந்த பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வண்டி மாடுகள் வந்து பங்கேற்றன. இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்களும் இளைஞர்களும் செய்திருந்தனர்.




