• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுகை நகரக் கிளை 2 சார்பாக ரத்த தான முகாம்..,

Byமுகமதி

Aug 30, 2026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜஅமாத் புதுக்கோட்டை கிளை 2 மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து இரத்ததானம் முகாமை 30.08.26 ஞாயிற்றுக் கிழமையன்று, தவ்ஹீத் மர்க்கஸில் நடத்தியது.

இந்நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் M.N.முபாரக் அலி தலைமை வகித்தார்.
கிளைத் தலைவர் பீர் முகமது ,காதர்,அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் மருத்துவத் தகுதி அடிப்படையில், 22 யூனிட்கள் இரத்தம் கொடையாகப் பெறப்பட்டு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இரத்தம் வழங்கிய அனைவருக்கும், குருதி வங்கி மருத்துவர் சரவணன் அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் மேலும் மாவட்டப் பொருளாளர் அப்துல் ரகுமான் ரஃவூப் நன்றி கூறினார். இறுதியாக, இம்முகாமில் பங்களிப்பு செய்த, இரத்த வங்கி மருத்துவர் சரவணன் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியின் சார்பாக அவரது குழுவிற்கும், இரத்தம் கொடையளித்த, கலந்து கொண்ட பொதுமக்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்த கிளை உறுப்பினர்கள், மாணவரணி, தொண்டரணி மற்றும் கிளை நிர்வாகத்திற்க்கு நன்றியினைத் தெரிவித்தார்.