• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

கருப்பு to வெள்ளை மாறிய ஸ்டாலின் ஐபிஎஸ்-க்கு புகழாரம்..

ByS.Ariyanayagam

Apr 18, 2026

திண்டுக்கல்லில் கருப்பு இருந்து வெள்ளைக்கு மாறிய முதல்வர் ஸ்டாலின் ஐபிஎஸ் க்கு புகழாரம் சூட்டினார். தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு உடையில் ஆண்டிபட்டி நடந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

முந்தைய பிரசார கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி அடைந்ததை தொடர்ந்து திண்டுக்கல் பிரச்சார கூட்டத்தில் வெள்ளை உடைக்கு மாறினார்.

திண்டுக்கல்:தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டாசு வெடித்து கொண்டாடினார். பின்பு கூட்டத்தில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஐ.பி.கோட்டையாகும். நாங்கள் ஐ.பி.மாவட்டம் என்று தான் அழைப்போம். தம்பி ஐபி செந்தில்குமார் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார். ஐ.பி.யின் மகன் செந்தில்குமார் என்பதை விட செந்தில்குமாரின் தந்தை ஐ.பி. என்ற அளவுக்கு அவருடைய செயல்பாடுகள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது.

இளைஞர் அணி துணைச் செயலாளர் கிழக்கு மாவட்ட செயலாளர் என பல பதவிகள் வகித்த போதும் உழைப்புக்கு முக்கியம் தரக்கூடியவர் செந்தில்குமார் என புகழாரம் சூட்டினார்.

பின்பு பேசியதாவது:
பிரதமர் மோடி தன்னுடைய 12 ஆண்டு கால ஆட்சியில் சந்தித்து இருக்கக்கூடிய
முதல் தோல்வி, மாபெரும் தோல்வி இது”-தொகுதி மறுவரையறை தீர்மானம் தோல்வி
“திண்டுக்கல் ஊரின் பெயர் மட்டுமல்ல. புரட்சியின் பெயர். தனித்துவமான பிரியாணி, காவலுக்கு பெயர் போன திண்டுக்கல் பூட்டு. திண்டுக்கல் மாவட்டத்தையே நாங்கள் ஐ.பி மாவட்டம் என்று தான் சொல்வோம். நீங்கள் அனைவரும் ஐ பி மற்றும் ஐபிஎஸ் ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பிரச்சாரம் செய்தார்.