• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கனடாவில் கத்திக்குத்து – 10 பேர் உயிரிழப்பு!!

ByA.Tamilselvan

Sep 5, 2022

கனடாவில் அடுத்தடுத்து நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
கனடா நாட்டின் சஸ்கட்சாவான் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றது. ரஜினா நகரில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் சீர் நேஷன், வெல்டன், சஸ்கடன் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது.இந்த கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர். கனடியன் கால்பந்து லீக் போட்டிகள் (ரக்பி) ரஜினா நகரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தியது யார், தாக்குதலுக்கான பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கத்திக்குத்து தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகத்தில் டமியன் சண்டர்சன், மைலஸ் சண்டர்சன் ஆகிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கனடாவில் அடுத்தடுத்து கத்திக்குத்து நடத்தப்பட்டு 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.