

ஆப்கானிஸ்தானில் ரஷ்ய தூதரகம் அருகே குண்டு வெடித்ததில் 2 அதிகாரிகள் உட்பட 20 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் நகரில் இருந்து தென்மேற்கில் ரஷிய தூதரகம் அமைந்த பகுதியருகே தருலாமன் சாலையில் இன்று காலை 11 மணி அளவில் திடீரென குண்டு வெடித்தது. தூதரகத்திற்கு வெளியே விசாக்களைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த மக்களில் பலர் பலியாகி இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், குண்டுவெடிப்பில் 2 ரஷிய தூதர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர் என ரஷிய அரசு தொடர்புடைய ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் மசூதியில் நடந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.