• Tue. Feb 11th, 2025

நள்ளிரவில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை தந்த எஸ்.ஐ: விருதுநகரில் பரபரப்பு

ByIyamadurai

Dec 26, 2024

இரவுப்பணியின் போது மது போதையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு சார்பு ஆய்வாளர் இடமாற்றம செய்யப்பட்ட சம்பவம் விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தொம்பக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (54). காவல் துறையில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றும் இவர்,ராஜபாளையத்தில், மலையடிப்பட்டி காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில், சம்பவத்தன்று இரவில் காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீசிடம் மதுபோதையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக மோகன்ராஜூ மீது புகார் எழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த விருதநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். அத்துடன், மோகன்ராஜை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். போதையில் பெண் போலீசுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் விருதுநகர் காவல் துறையினர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.