• Wed. Apr 24th, 2024

ஸ்ரீவில்லிபுத்தூர் எருதுகட்டு விழா .. களம் காணும் காளைகள்..

Byமகா

Aug 13, 2022

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆடி மாத பெருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற எருதுகட்டு விழா. உற்சாகமாக கண்டுகளித்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது பாட்டைக்குளம் கிராமம். இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் வெகு விமர்சியாக எருதுகட்டும் விழா என்பது வெகு விமர்சையாக நடைபெறும்.இந்நிலையில் ஸ்ரீ பாலாண்டி அய்யனார், ஸ்ரீ கருப்பசாமி கோவில் ஆடி மாத பெருவிழாவை முன்னிட்டு அந்த கிராமத்தில் உள்ள மைதானத்தில் வெகு விமர்சையாக எருதுகட்டு விழா நடைபெற்றது.

முன்னதாக கோயிலில் பூஜை செய்துவிட்டும், அதன் பின்பு ஒவ்வொரு காளைக்கும் பூஜை செய்த பின்னரே எருதுகட்டு விழா துவங்கியது.அதன் பின்பு ஒவ்வொரு காளையாக பெரிய வடத்தை கழுத்தில் கட்டி பின்னர் அந்த காளையை மைதானத்தில் ஓடவிடுகின்றனர்.அதன் பின்பு காளை முன்பு வீரர்கள் உர்ரிகாட்டி அதை அடக்க முயற்சி செய்கின்றனர்.இதில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.காளைகள் களத்தில் எவ்வளவு நேரம் விளையாடுகிறதோ அதை பொறுத்து காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றனர்.இந்த எருது கட்டும் விழாவில் 30 ற்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தன. மேலும் இந்த விழாவை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *