• Fri. Apr 19th, 2024

சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முது முனைவர் அழகுராஜா பழனிச்சாமி கண்டன அறிக்கை

ByA.Tamilselvan

Aug 13, 2022

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் தேவேந்திர குல வேளாளர்களைப் பற்றி 10 நிமிடம் பேசி உலகம் முழுவதும் தலை நிமிரச் செய்தார் ,இப்படி வரலாற்றுச் சிறப்புமிக்க பாரத பிரதமர் அவருக்கு தெரியாமல் தேவேந்திர குல வேளாளர்களை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி புறக்கணிக்கின்றனர் மற்றும் அவமதிக்கின்றனர் . பிப்ரவரி 2021 ,25ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டு அங்கும் பத்து நிமிடங்கள் தேவேந்திரகுல வேளாளர் வரலாற்றுச் சிறப்புகளை பேசி மகிழ்தார். மொத்தம் இந்தியாவிலேயே 12000 ஜாதிகள் உள்ளன எந்த ஜாதியை பற்றியும் எந்த ஒரு இடத்திலும் அவர் பேசியது கிடையாது அதிலும் குறிப்பாக இந்தியாவின் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பாக அவர் வாயில் இருந்து வந்த ஒரே வார்த்தை “நீங்கள் தேவேந்திரர் நான் நரேந்திரன்” என்ற பெருமை தேவேந்திர குல வேளாளரை மட்டுமே சாரும் என்று நமது தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் மீது நல்ல பற்றும் மற்றும் சுய கவுரத்தோடு வாழக் கூடியவர்கள் இந்தியாவிலே என்று குறிப்பிட்டு பேசினார் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தேவேந்திரகுல வேளாளர்களை பற்றி 2015 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த மாநாட்டில் தேவேந்திரகுல வேளாளர்களின் பெருமைகளை உலக அளவில் பறைசாற்றினார் என்பது அனைவரும் அறிந்தது. நேற்று தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைமையிடம் சுதந்திரப் போராட்ட தியாகிகள் பெயர்களையும் போட்டோக்களையும் வெளியிட்டுள்ளனர் அதில் குறிப்பாக தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சார்ந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிந்து கொள்ள வேண்டியது தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகள் என்னுடைய முப்பாட்டனார் இந்தியாவின் முதல் துணை பிரதமர் “சர்தார் வல்லபாய் பட்டேல்” “இரும்பு மனிதர்” மற்றும் “பிஸ் மார்க்” என்று அழைக்கப்பட்டவர் கவர்னகிரி போர்ப்படை தளபதி சுதந்திரப் போராட்ட தியாகி மாவீரன் சுந்தரலிங்க குடும்பர், நெற்கட்டும் சேவல் போர்படை தளபதி மாவீரன் வெண்ணி காலாடி, சுதந்திர போராட்ட தியாகி கொங்கு நாட்டு ராமசாமி மள்ளர் ,சுதந்திரப் போராட்ட தியாகி வடிவு மள்ளத்தி சுதந்திர போராட்ட பெண்மணி மற்றும் இந்தியாவின் ராணுவ வீரர் சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரன் போன்றவர்களை பாரதிய ஜனதா கட்சி தலைமையிடம் ஒருவரை கூட போட்டோவிலோ பெயரைக் கூட இடம்பெறச் செய்யவில்லை காரணம்
தமிழகத்தில் உள்ள பிஜேபி சார்ந்த அண்ணாமலை ஐபிஎஸ் வேலை பார்த்தவர் கர்நாடகத்தில் பணியாற்றியவர் அந்தப் பணிக்கு வருவதற்கு முன்பு உறுதிப்பிரமாணம் எடுத்துக் கொண்டிருப்பார் அது என்ன என்பது அவருக்கே தெரியும் இருக்கும்போது தேவேந்திரகுல வேளாளர் சமுதாய சுதந்திரப் போராட்ட தியாகிகள் அவர் கண்ணுக்குத் தெரியவில்லையா? இல்லை தெரிந்தும் தெரியாதபோல் நடிக்கிறாரா… ஏன் அவர்களை போட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வருகிறதா இல்லை யாராவது அவருக்கு தவறான ஆலோசனை வழங்குகிறார்களா இதை அவர் தெளிவுபடுத்த வேண்டும் பாரத ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு தமிழக வரலாறு தெரியாதா ?தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட தியாகங்கள் யார் என்று தெரியாதா ?ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர் சமுதாயத்தில் உள்ளவர்களை மட்டும் தான் அவர் கண்ணுக்கு தெரியுமா?
மற்றும் பிஜேபியின் தலைமையிடம் கேசவ விநாயகம் பிள்ளை வேணுமென்றே நம்ம சமுதாயத்திற்கு எதிராக சதி செய்கின்றனர். இவர்களை வன்மையாக கண்டிக்க வேண்டும் இவர்களைப் பற்றிய புகார்களை நரேந்திர மோடி அவர்களுக்கும் பாரதிய ஜனதா தேசிய தலைவர் நட்டா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயலாளர் பி எல் சந்தோஷ் அவர்களுக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கும் நம்முடைய தமிழகத்துடைய தேவேந்திரகுல வேளாளர்களின் மகாகுரு குருமூர்த்தி அவர்களுக்கும் புகாராக தயாரித்து சமுதாயத்தில் உள்ள 150 சங்கங்கள் கூட்டமைப்புகள் அரசியல் கட்சிகள் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலக சங்கங்கள் அனைத்தும் புகார்களாக எழுதி தமிழகத்தில் தேவேந்திர குல சமுதாயங்கள் ஒதுக்கப்படுகின்றன இதற்கு முழு காரணம் அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கேசவ விநாயக பிள்ளை தலைமையிட பாரதிய ஜனதா மாநில அமைப்பாளர் எல் முருகன் மத்திய இணை அமைச்சர் ஆகியோர் தான் என் வலியுறுத்த வேண்டும்.நயினார் நாகேந்திரன் அவர் எம்எல்ஏ ஆவதற்கு உறுதுணையாக இருந்து மாவட்டத்தில் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் தேவேந்திரகுல வேளாளர் ஓட்டு வாங்கி வெற்றி பெற்று அதற்கு வாழ்த்து தெரிவித்தார் தேவேந்திரகுல வேளாளர் இல்லை என்றால் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் நான் வெற்றி பெற்று இருக்க மாட்டேன் என்று அவர் பிரஸ்மீட்டில் கூறியிருந்தார் .அதற்கு கடுமையாக பாடுபட்ட தேவேந்திரகுல வேளாளர் பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் மகாராஜன் அவர்களை சாரும் .கட்சியின் சார்பாக அவருக்கு இன்னோவா கார் பரிசளிக்கப்பட்டது கட்சிக்காக உண்மையாக உழைக்கப்பட்டவரே அதே பதவியில் நீடிக்காமல் கட்சிப் பதிவை விட்டு தூக்கி விட்டனர் அவரை அடிப்படை உறுப்பினராக வைத்துள்ளனர் இதற்கு முழு காரணம் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எல் முருகன் மத்திய இணை அமைச்சர் மாநில பாரதிய ஜனதா அமைப்பாளர் கேசவ விநாயகம் பிள்ளை மற்றும் நயினார் நாகேந்திரன் சட்டமன்ற உறுப்பினர் இவர்களை தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம வாரியாக கண்டனங்களை தெரிவிக்கின்றன .தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 10 மாவட்ட தலைவர்களை தென் மாவட்டங்களில் அண்ணாமலை அவர்கள் உடனடியாக நியமன செய்யப்பட வேண்டும் இல்லை என்றால் ஒட்டு மொத்த தேவேந்திரகுல வேளாளர்களும் டெல்லி சென்று முற்றுகை போராட்டம் நடத்துவோம் பாரத பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்தில் 20 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற வேண்டியதை தடுத்து ஒரு தேவேந்திர குல வேளாளர் கூட சட்டமன்றத் தொகுதி ஒதுக்காமல் 20 தொகுதிகளையும் அவரவர் சாதிகளுக்கே ஒதுக்கி தோல்வி அடையச் செய்தனர். இதற்கு காரணம் எல் முருகன் மற்றும் கட்சியைச் சேர்ந்த மாற்று சமுதாயத்தினர் சேர்ந்தது தாமரையை மலர விடாமல் செய்து விட்டனர். ஒரு தொகுதியை மட்டும் ஆதி திராவிடர் சமுதாயத்துக்கு ஒதுக்கிவிட்டு அவர்கள் பாரதிய ஜனதா ஒருத்தர் கூட இல்லை தேவேந்திர குல வேளாளர்கள் தமிழகத்தில் 70% மக்கள் அனைவரும் பாரதிய ஜனதா நோக்கி பயணிக்கின்றனர் தாங்கள் அறிந்ததே .
உடனடியாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மறுபரிசலனை செய்து உங்களோடு கட்சியின் தோழமையாக இருக்கும் எங்களது சமூகப் போராளி அரசியல் கட்சியின் ஆசான் மற்றும் தலைவர் ஜான்பாண்டியன் அவர்களை நீங்கள் ஆலோசனை கேட்டு இருக்கலாம் அவரிடம் உங்கள் சமுதாயத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் யார் யார் ஃபோட்டோக்கள் இடம் பெற செய்ய வேனணும் என்று கேட்டிருக்கலாம் .சமூகப் போராளி ஜான் பாண்டியன் அவர்கள் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உடன் நெருக்கமாகவும் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
கோமாதாவே தெய்வமாக வழிபடும் இந்தியாவில் ஒரே சமூகம் தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் என்று அனைவரும் அறிந்ததே இந்திரனே கடவுளாக வழிபடும் முக்கோடி தேவர்களும் தலைவரே இந்திரர் வம்சாவளியினர் மற்றும் வடக்கே வன்னியர் தெற்கே தேவேந்திரர் சத்திரியர் வம்சம் இவர்களை எவராலும் அழிக்க முடியாது.

அதற்கு திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டில் சிறந்தது தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு
திராவிட மாடல் அரசின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் மக்கள் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தேவேந்திர குல வேளாளர்களுக்கு 8 சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்கி தந்துள்ளார் நமது கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கிறார் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் அவர்கள். தென்காசி மாவட்ட செயலாளராக தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த செல்லத்துரை அவர்கள் நியமிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார் .அதுபோல மாண்புமிகு ஏ கே எஸ் விஜயன் மாநில விவசாய செயலாளராக உள்ளார் தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதநிதியாக ஓராண்டுகள் முடிந்து மீண்டும் சிறப்பாக பணி செய்ததற்காக இரண்டாவது ஆண்டு நீடிப்பு செய்திருக்கிறார் இது வரலாற்று சிறப்புமிக்கது .நமது சமுதாய மக்களுக்கு மாநிலத்தில் பல வேளாண்துறை முதன்மச் செயலாளர், கால்நடை,மீன்வளம் ,பால்வளத் துறை முதன்மை செயலாளர் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் பணிகளும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பணிகளும் சட்ட ஒழுங்கு DIG போன்ற பணிகளை ஒதுக்கி கொடுத்து தேவேந்திரகுல வேளாளர்களின் நேர்மைக்கு பரிசளித்து வருகிறார். கலைஞர் அவர்கள் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு எந்த அளவு செய்தாரோ அதை விட ஒரு படி மேலாக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு செய்து வருகிறார் .அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும் திராவிட மாடல் அரசின் தலைவர் அவர்களுக்கும் முதல்வர்களுக்கும் கோரிக்கைகளை வைக்க தமிழ்நாட்டில் உள்ள தேவேந்திரகுல வேளாளர் 100 கூட்டமைப்புகள் உள்ளன மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளன அவைகள் முன் வர வேண்டும். தமிழக அரசு எவ்வளவோ பரவாயில்லை நமது போர்படை தளபதி மாவீரன் சுந்தரலிங்க குடும்பர் அவர்களை சுதந்திர போராட்ட தியாகிகள் படத்தை இடம்பெறச் செய்தது ஒரு விதத்தில் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது அதற்கு தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் சார்பாக நன்றிகளை தமிழக அரசுக்கும் தமிழக முதல்வர் அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *