• Thu. Jul 17th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

ஸ்ரீவீராத்தாள் அம்மன் கோயில் திருவிழா..,

ByS. SRIDHAR

May 28, 2025

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே காட்டாத்தி ஸ்ரீ.வீராத்தாள் அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மது எடுப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் 1000கும் மேற்பட்ட பெண்கள் மது குடங்களை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்று வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா காட்டாத்தியில் புகழ் பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ.வீராத்தாள் அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் நடைபெறுவது வழக்கம் அதே போல இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று நடைபெற உள்ளது.

அதனை முன்னிட்டு காட்டாத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பானைகளில் நவதானியங்களை நிரப்பி அதில் தென்னை பாலைகளை வைத்து அலங்கரித்து மது குடங்களை தாரை தப்பட்டைகள் முழங்க வானவேடிக்கையுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று அய்யனார் கோவிலில் மது குடங்களை வைத்து சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து ஸ்ரீவீரத்தாள் அம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்று கும்மியடித்தும் குலவையிட்டும் அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

மேலும் ஸ்ரீ.வீராத்தாள் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான அய்யனார் சுவாமி, கருப்பையா சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது வருகின்றது. மது எடுப்பு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.