• Wed. Mar 19th, 2025

ஸ்ரீவில்லி.,ஆண்டாளைப்பற்றி ஆராய்ச்சி புனே பல்கலைக்கழகத்தின் மாணவிகள்

ByT. Vinoth Narayanan

Feb 28, 2025

ஸ்ரீவில்லி.,ஆண்டாளைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வந்த மகாராஷ்டிரா – புனே பல்கலைக்கழகத்தின் மாணவிகள்பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளைப்பற்றி ஆராய்ச்சி செய்ய மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவைச் சேர்ந்த மாணவிகள் கடந்த ஒரு வாரமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் முகாமிட்டுள்ளனர்.தமிழ் பக்தி இலக்கியத்தில், ஆழ்வார்கள், நாயன்மார்களின் பங்கு இன்றியமையாத ஒன் றாகும். இனிய பாசுரங்களைக் கொண்ட நாலாயிரத் திவ்விய ப்பிரபந்தம் என்ற நூலானது வைணவர்களின் புனிதநூலாகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாளின் இலக்கியங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய, புனேவில் உள்ள “ப்ளேம்’ பல்கலைக்கழக மாணவிகள் 11 பேர், தங்கள் பேராசிரியர் முனைவர் ராகவேந்திராவுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்துள்ளனர். ஒரு வார காலமாக, ஆண்டாளைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள அவர்கள், “ஆண்டாளின் கவித்துவம், அவரது பக்திப் பாரம்பரியம், ஆண்டாள் கோவிலின் கட்டிடக்கலை, மற்றும் சம காலத்துக்கு அந்தப் பாசுரங்களின் பொருத்தம்” ஆகியவற்றைப்பற்றி ஆய்வு செய்து முழுமையான ஆய்வுக் கட்டுரை ஒன்றைத் தங்கள் பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பிக்க உள்ளனர்.

நாச்சியார் என்ற ஆண்டாளைப்பற்றிய தரவுகளைத் திரட்டிக்கொண்டிருக்கும் அவர்கள், 150ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட புகழ் பெற்ற பென்னிங்டன் நூலகத்துக்கு வந்து அங்கு இருக்கும் மிகப்பழைய நூல் களை ஆய்வுசெய்தனர். பிறகு, பென்னிங்டன் நூலகக்குழுவின் செயற்குழு உறுப்பினரும், மூத்த வழக்கறிஞரும், எழுத் தாளருமாகிய எஸ். ரமேஷ், அவர்களை, அவரது வீட்டில் சந்தித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரின் புராதனத்தன்மை, அதன் வரலாறு, ஆண்டாளின் இனிய கவித்துவம் ஆகியவற்றை அந்தமராட்டிய மாணவிகளுக்கு விளக்கிய ரமேஷ் அவர்கள், ஆண்டாளை ஒருபெண்ணியக் கவிஞராகச் சித்தரிப்பது தவறு. பெண் கவிஞர் வேறு. பெண் ணியக்கவிஞர் வேறு. இறை வழிபாட்டில் பெண்களை முன்நிறுத்திய ஆண்டாளைப் பெண்பாற்புலவராகப் பார்க்க வேண்டுமே தவிர, பெண்ணியப் போராளியாகப்பார்க்கக்கூடாது என்று விளக்கினார். ஸ்ரீவில்லி புத்தூரின் தொன்மையான வர லாறு, நாச்சியார் ஆண்டாளின் இலக்கியமேன்மை, ஆண்டாள் கோவிலின் கட்டிடக்கலையின் அற்புதம் ஆகியவற்றைத் தங் கள் ஆய்வுக்கட்டுரையில் மிக விரிவாகப் பதிவு செய்ய இருப்பதாகப் பல்கலைக்கழக மாணவிகள் தெரிவித்தனர்.