• Mon. Jun 29th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

பாலசுப்ரமணிய கோவில் சிறப்பு வழிபாடு..,

ByK Kaliraj

Oct 10, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா துலுக்கன்குறிச்சியில் வாழைமர பால சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாத கிருத்திகையை முன்னிட்டு பாலசுப்ரமணியருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. .

அதில் பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், திருநீறு, திரவிய பொடி, உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரிசி மாவு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாக கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது