பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, பல முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தற்போது பெங்களூரு – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதன்படி, பெங்களூரு – தூத்துக்குடி சிறப்பு ரயில் (06569) ஜன.10 அன்று பெங்களூரூவில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் அதிகாலை 3.23 மணிக்கு சேலம் வந்தடையும். சேலத்திலிருந்து 3.33 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
இதேபோல் தூத்துக்குடி – மைசூர் சிறப்பு ரயில் (06570) வருகிற 11-ம் தேதி தூத்துக்குடியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு கரூர், நாமக்கல் வழியாக இரவு 7.35 மணிக்கு சேலம் வந்தடையும். சேலத்திலிருந்து 7.45 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக மறுநாள் காலை 6.30 மணிக்கு மைசூர் சென்றடையும் என்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.