


மாவட்ட காவல்துறை மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு கண்சிகிச்சை முகாம் மயிலாடுதுறையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மற்றும் கும்பகோணம் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு கண் சிகிச்சை முகாம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கண்களுக்கு பரிசோதனை செய்து, மேல் சிகிச்சை மற்றும் கண்ணுக்கு கண்ணாடி பொருத்துவது உள்ளிட்ட பணிகளை சிறப்பு சலுகையில் செய்யப்பட்டது. மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் ஜீவானந்தம் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் அவர்களுக்கு குடும்பத்தினர் 150 பேருக்கு சிறப்பு கண் பரிசோதனை செய்யப்பட்டு மேல் சிகிச்சை தேவைப்படுபவருக்கு அதற்கான பரிந்துரை செய்யப்பட்டது கண்ணாடிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது.

