• Tue. Apr 14th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

ஆஞ்சநேயருக்கு பலவித பழங்களைக் கொண்டு சிறப்பு வெண்ணெய் காப்பு அலங்காரம்..,

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி மேட்டுபட்டிப் பகுதியில் அமைந்துள்ளது. அருள்மிகு ஸ்ரீ அஞ்சலிவரத ஆஞ்சநேயர் திருக்கோவில் ஒவ்வொரு வருடமும் சித்திரை 1ம் தேதி தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு 10 ஆயித்து எட்டு பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்வது வழக்கம்.

இவ்வருடம் 21-வது வருடமாக பராபவ வருடம் சித்திரை 1-ம் தேதி வருடப்பிறப்பை முன்னிட்டு சுவாமிக்கு ஆப்பிள், பச்சை ஆப்பிள், கமலா ஆரஞ்சு, மாதுளை பழம், தேங்காய். அன்னாசி, கொய்யா, பலாப்பழம், திராட்சை, தர்பூசனி, சாத்துகுடி, முலாம் பழம், பேரிச்சம்பழம், உலர்திராட்சை, முந்திரி பருப்பு, செர்ரி பழம், உட்பட பலவித பழங்களைக் கொண்டு சிறப்பு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்திருந்தனர். ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்து செர்ரிப்பழம், அத்திப்பழம், கொய்யா, ஆப்பிள், பச்சை ஆப்பிள், உலர் திராட்சை, மாதுளை, பழத்தின் விதைகளை கொண்டு ஆடைகள் அணிவித்திருந்தனர்.

சுவாமிக்கான அலங்காரத்தை கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீசுந்தாராஜா பட்டாட்சாரியார் தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர்.

சிறப்பு அலங்காரம் குறித்து கோயில் குருக்கள் ஸ்ரீ ீசுந்தராஜா பட்டாச்சாரியார் கூறுகையில் சித்திரை 1-ந் தேதி தமிழ் வருட பிறப்பு அன்று காலையில் எழுந்து சுவாமி முன்பு பலவித பழங்களில் கண்விழித்தால் நல்ல பலன் கிடைக்கும், செல்வநிலை உயரும் என்பது ஐதீகம். ஆனால் சுவாமியையே பழ அலங்காரத்தில் தரிசனம் செய்தால் பூரண பலன் கிடைக்கும் என்பதால் ஒவ்வொரு வருடமும் சுவாமிக்கு பழங்களை கொண்டு அலங்காரம் செய்து வருகிறோம். இவ்வருடம் 21-வருடமாக இந்த சிறப்பு அலங்காரம் செய்துள்ளோம் என்றதோடு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுவாமிக்கு அணிவித்த பழங்கள் பிரசாதமாக வழங்கப்படும் என்றார்.

இதுபோல சின்னாளபட்டி பிரிவில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு சுவாமிக்கு 16 வகை அபிஷேகங்கள் செய்து சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்த பக்தர்களுக்கு நாணயங்களை புத்தாண்டு பரிசாக வழங்கினார்கள். அதிகாலை முதல் கோவிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், புளியோதரை, பலாச்சுளை பிரசாதமாக வழங்கப்பட்டது.
.
சுவாமிக்கான அலங்காரத்தை ஜெகநாதன் குருக்கள் சிறப்பாக செய்திருந்தார்