• Thu. Jul 16th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கொரோனா பாதித்தவர்களுக்கு சிறப்பு ஆம்புலன்ஸ்!

கொரோனா உறுதியானவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சிறப்பு ஆம்புலன்ஸ் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் வகையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதோடு, சில புதிய கட்டுப்பாடுகளும் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா உறுதியானவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சிறப்பு ஆம்புலன்ஸ் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அதன்படி சென்னையில் 42 சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை தொடக்கி வைத்துள்ளார்.