திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உற்சவர் முருகனுக்கு தெய்வானைக்கும் இன்று பால் தேன் பன்னீர் இளநீர் திரவிய பொடிகள் மற்றும் பழங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதோடு தீப தூப ஆராதனைகளும், மங்கள வாத்தியங்கள் முழங்க, வேதவியா ஆச்சாரியார்கள் மந்திரங்கள் பாட அரோகரா கோஷங்களோடுஇந்த நிகழ்ச்சி நடைபெற்றது. உற்சவர் முருகனையும் தெய்வானையும் காண்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.