• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மீனாட்சி அம்மன் கோயிலில் ஜூலை-29 ல் ஆடிமுளைக்கொட்டு திருவிழா துவக்கம்

ByA.Tamilselvan

Jul 8, 2022

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் ஆடிமுளைக் கொட்டு திருவிழா துவங்கவுள்ளது.
மதுரை எப்போது திருவிழாக்களின் நகரம். அதிலும் மதுரை மீனாட்சி கோயிலில் வருடத்தில் 285 நாட்களும் எதேனும் ஆன்மீக நிகழ்வுகள்நடைபெறுகிறது. அந்த வகையில் வரும் ஜூலை 29 ல் ஆடி முளைக்கொட்டு திருவிழா நடைபெறவுள்ளது. மினாட்சி அம்மன் கோயிலில் பல திருவிழாக்கள் நடைபெற்றுவந்தாலும் ஆடிமுளைக்கொட்டுத் திருவிழா ,நவராத்திரி விழா ,மார்கழி எண்ணைகாப்பு உள்ளிட்டவை மீனாட்சி அம்மனுக்கு பிரத்யேகமானவை. இந்நிலையில் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 8 வரை 10 நாட்கள் மீனாட்சி அம்மன் கோயிலில் தங்க ரத உலா திருகல்யாண நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.