• Fri. Apr 19th, 2024

பக்ரீத் -இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!!

ByA.Tamilselvan

Jul 10, 2022

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிகாலையிலேயே மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.
பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமிய மக்கள் ஈடுபட்டனர். நாகூர் தர்காவிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
பக்ரீத் பண்டிகையையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்துள்ள வாழ்த்த் செய்தியில், அமைதியான, வளமான வாழ்க்கையை வாழ்வதற்கு, நமது இளம் தலைமுறையினருக்கு நற்சிந்தனை, கருணை, பெருந்தன்மை ஆகியவற்றை வழங்குவதற்கு இந்நன்னாளில் உறுதி கொள்வோம் என்றார்
இதேபோல் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், நபிகள் நாயகத்தின் போதனைகளுக்குச் சிறப்பும், பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்தத்தியாகப்பெருநாளை மகிழ்ச்சியுடனும், கரோனா கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து பாதுகாப்புடனும் கொண்டாடிட வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *