
தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட மத்திய அரசின் நிதியை தெற்கு ரயில்வே திருப்பி அனுப்பியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தெற்கு ரயில்வேயில் தமிழகம், கேரளத்தில் நடைபெறும் 12 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.727.79 கோடி நிதியை பல்வேறு காரணங்களை முன்வைத்து தெற்கு ரயில்வே திருப்பி அனுப்பியுள்ளது.
இதில் தமிழகத்தில் நடைபெறும் 9 திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியும் அடங்கும். 3 இரட்டை, அகலப் பாதை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.400 கோடி, 6 புதிய பாதை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.247 கோடி நிதியும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இதுபோல, கேரளாவில் 3 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியையும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. திண்டிவனம் – திருவண்ணாமலை (வழி:செஞ்சி), அத்திப்பட்டு- புதூர் ஆகிய 2 புதிய ரயில் பாதை திட்டங்கள் ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்டன.
இதுதவிர, மதுரை – தூத்துக்குடி (வழி: அருப்புக்கோட்டை) ராமேசுவரம் – தனுஷ்கோடி ஆகிய இரண்டு புதிய ரயில் பாதை திட்டங்கள் நிறுத்தி வைப்பதற்கான பரிந்துரை ஏற்கெனவே அனுப்பட்டுள்ளன. மேலும், ஈரோடு – பழநி திட்டம், சென்னை – கடலூர் (வழி: மகாபலிபுரம்) திட்டத்தை நிறுத்தி வைக்க தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, பெரும்புதூர் – கூடுவாஞ்சேரி- ,ருங்காட்டுகோட்டை திட்டத்தை புதியபாதை திட்டத்தில் ,ருந்து நீக்கி, சர்வேக்கு நகர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 3 புதிய பாதை திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவற்றில் காரைக்கால் துறைமுகம் – பேரளம் வரை சரக்குபாதை திட்டமும், திண்டிவனம் – நகரி திட்டம், மொரப்பூர் – தருமபுரி திட்டம் ஆகிய திட்டங்களும் பயணிகள் பயன்பாட்டுக்கும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற திட்டங்கள் கைவிடப்படும் நிலை உருவாகிறது. இரட்டை பாதை திட்டத்தை பொருத்தவரை, சேலம் – திண்டுக்கல் (வழி: கரூர்) திட்டம், கரூர் – ஈரோடு திட்டம், விழுப்புரம் – காட்பாடி திட்டம் ஆகிய திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை கிடைக்காததால், ,ந்த 3 திட்டங்களுக்கு திட்டநிதி ரூ.400 கோடி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 872 கி.மீ. தொலைவுக்கு 10 புதிய பாதை திட்டங்கள் நடைபெற்று வந்தன. கடந்த நிதியாண்டு தொடக்கத்தில் புதியபாதை திட்டங்களுக்கு ரூ.13,646 கோடி நிதி தேவைப்பட்டது. அதேநேரத்தில், நடப்பு மத்திய பட்ஜெட்டில் புதிய பாதை திட்டத்துக்கு மட்டும் ரூ.617 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்படும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் மீளவட்டம் – மேலாமருதூர், வாலாஜா சாலை – ராணிபேட்டை என மொத்தம் 24 கி.மீ. புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக ரயில் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ரூ.728 கோடியை திருப்பி அனுப்பியது தமிழகத்துக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் செய்யும் துரோகம் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். மத்திய அரசிடம் தமிழக அரசு பேச வேண்டும். திட்ட செலவில் ஒரு பகுதியை ஏற்க வேண்டும். ஆண்டுதோறும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறித்த விவரங்கள் அடங்கிய கால அட்டவணையை ரயில்வே வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் தெற்கு ரயில்வே உறுதி: தமிழகத்தில் குறிப்பிட்ட சில ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதற்கு தெற்கு ரயில்வே அளித்துள்ள விளக்கம் தெரிவித்திருப்பதாவது..,
தனிப்பட்ட திட்டங்களில் நிதி ஒதுக்கீடு மற்றும் பயன்பாடு ஒரு மாறும் செயல்முறையாகும், மேலும் பல்வேறு அளவுருக்களின் அடிப்படையில் பல்வேறு காலாண்டுகளில் மாறுபடும். ஒவ்வொரு கட்டமாக நிதி வெளியிடுவது, திட்டத்தின் நிலவரப்படி நிலவும் முன்னேற்றம் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலாண்டில் பணத்தைப் பயன்படுத்துவதற்கான திட்டத்தின் திறன் ஆகியவற்றுடன் ஒப்பிடப்படுகிறது.
மேலும் பொருந்தாத தன்மை இருக்கும்போது, பயன்படுத்தப்படாத நிதிகள் அதிக நிதி தேவைப்படும் திட்டங்களுக்கு மாற்றப்படும். தமிழகம் மற்றும் கேரளாவில் சில திட்டங்கள் பல்வேறு நிலைகளில் உள்ளன. அதாவது இறுதி இருப்பிட சர்வே மற்றும் இறுதி பாதை சீரமைப்பு, விரிவான திட்ட அறிக்கை இறுதி நிலை, மாநில அரசின் உதவியுடன் நிலம் கையகப்படுத்துதல் நிறைவு, பணிகளை நிறைவேற்றுவதற்கான நிறுவனங்களை நிர்ணயிப்பதற்கான டெண்டர் செயல்முறை நிறைவு ஆகியவை பல்வேறு கட்டங்களில் இருக்கின்றன.
ரயில்வே மண்டலம் மற்றும் ரயில்வே வாரியத்துக்கு ,டையேயான நிதி ஓட்டம் என்பது ஒரு உள் மாறும் செயல்முறையாகும். ,து தேசிய வளங்களை திறம்பட பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தெற்கு ரயில்வே தேவைப்படும் போது திட்டங்களுக்கு அதிகபட்ச நிதியைப் பெறுகிறது. எனவே, தெற்கு ரயில்வேயில் தமிழகம் மற்றும் கேரளாவில் அனுமதிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற உறுதிபூண்டு இருக்கிறோம். இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
