• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை ரயில்வே கோட்டத்திற்குப்பட்ட எம்.பிக்களுடன் தென்னக இரயில்வே பொது மேலாளர் ஆலோசனை

Byp Kumar

Mar 11, 2023

ஆர்.என். சிங், தெற்கு ரயில்வே பொது மேலாளர், மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
கூட்டத்தில் சு.வெங்கடேசன் (மதுரை மக்களவைத் தொகுதி),· மாணிக்கம் தாகூர் (விருதுநகர் மக்களவைத் தொகுதி)
பி.ரவீந்திரநாத் (தேனி மக்களவைத் தொகுதி)· . கார்த்தி ப.சிதம்பரம் (சிவகங்கை மக்களவைத் தொகுதி),சு.திருநாவுக்கரசர் (திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி),· . பி.வேலுசாமி (திண்டுக்கல் மக்களவைத் தொகுதி)·. கே.சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி),· . தனுஷ் எம்.குமார் (தென்காசி மக்களவைத் தொகுதி)· . வைகோ (ராஜ்யசபா உறுப்பினர் )தெற்கு ரயில்வேயின் அனைத்து துறைகளின் முதன்மைத் தலைவர்களும், பி.அனந்த், மதுரை கோட்ட கோட்ட ரயில்வே மேலாளர் பங்கேற்றனர். ஆர்.என். சிங், தெற்கு ரயில்வே பொது மேலாளர், பாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்று, தெற்கு ரயில்வேயின் பல்வேறு சாதனைகள் மற்றும் பல்வேறு பயணிகள் வசதிகள் மேம்பாடு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.


மதுரை கோட்டத்தில் சமீபத்தில் முடிக்கப்பட்ட முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் குறித்து விளக்கப்பட்டது. மதுரை கோட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட பணிகள் குறித்தும் பொது மேலாளரால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கப்பட்டது.5 முக்கிய ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட இருக்கும் மறுகட்டமைப்பு பணிகளும் , அமிரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் மதுரை கோட்டத்தில் உருவாக்கப்பட உள்ள 15 ரயில் நிலையங்களின் விவரங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
எம்.பி.க்கள், ரயில் சேவைகள், நிறுத்தங்கள், பயணிகள் வசதிகள், இரயில்வே திட்டங்களை விரைந்து முடித்தல் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடினர். மதுரை கோட்டத்தின் சேவைகளை மேம்படுத்துவதற்கு, மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கினர்