மதுரை போக்குவரத்து ஊழியரின் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் மர்ம நபர்; சிசிடிவி காட்சிகள் வெளியீடு
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்ட போக்குவரத்து ஊழியரான மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்பவரது இருசக்கர வாகனம் காணாமல் போனதை அடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்ததை தொடர்ந்து சம்பவம் குறித்து மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் செந்தில்குமார் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமை அரசு போக்குவரத்து கழக அலுவலகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை எவ்வித அச்சமும் இன்றி திருடிச் செல்லும் மர்ம நபரை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே பேட்டரிகள் உள்ளிட்ட பஸ் உதிரி பாகங்கள் திருடு போனது போக்குவரத்து பணிமனை காவலாளியின் அலட்சியத்தால் நடைபெற்றதா, நாளை பேருந்து எடுத்து போனாலும் ஆச்சரியத்துக்கு இல்லை என ஓட்டுநருடன் நடத்துனர்களும் தெரிவித்தனர் ,இதனால் ஊழியர்களின் வாகனத்தை மட்டும் அல்லாது பேருந்துகளையும் உரிய பாதுகாப்புடன் பாதுகாக்க வேண்டும் எனவும் தேவையற்ற நபர்களை உள்ளே அனுமதிக்காமல் உரிய பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என காவலாளி எதிர்த்து உத்தரவிட வேண்டும் என போக்குவரத்து நிர்வாகத்திற்கு கோரிக்கை கொடுக்கின்றனர்