• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா

ByKalamegam Viswanathan

Mar 11, 2023

பல்வேறுதுறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு மதுரை செல்லூர் பாரதியார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் விருது வழங்கப்பட்டது.
மதுரை செல்லூர் பாரதியார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா தலைமை ஆசிரியை கண்ணகி தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை புவனேஸ்வரி முன்னிலை வகித்தார்.

ஆசிரியை குருவம்மாள் வரவேற்றார். விழாவில் எல் கே பி நகர் பள்ளி தலைமை ஆசிரியர் தென்னவன், ஆழ்வார் புரம் அப்துல் கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் செந்தில், சமூக ஆர்வலர் அசோக்குமார், மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை நிறுவனர் பாலமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் கலைத் திருவிழா 2023 மனித நேய குழு பாடல் பிரிவில் ஒன்றிய அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், முதல்வர் கோப்பை 2023 ல் கபாடி, இறகுப் பந்து, சிலம்பம் ஆகியவற்றில் பங்கேற்று தங்கள் பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்திய மாணவர்களுக்கும், இலக்கிய மன்ற போட்டிகளில் புத்தக மதிப்புரை போட்டியில் ஒன்றிய அளவில் முதலிடம் பெற்ற மாணவருக்கும் அவர்களின் முயற்சியை ஊக்குவிக்கும் விதமாக சாதனையாளர் விருது வழங்கி பாராட்டு தெரிவித்தனர். ஆசிரியர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார். விழாவில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.