• Wed. Jun 18th, 2025
[smartslider3 slider="7"]

இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் சோனியா காந்தி???

Byகாயத்ரி

Oct 3, 2022

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடை பயணம் சில நாட்களாக மேற்கொண்டு வருகிறார்

கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம் தற்போது தற்போது கர்நாடகவில் நடந்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் மட்டும் 21 நாட்கள் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது . இந்த நிலையில் அக்டோபர் 6ஆம் தேதி இந்த நடை பயணத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்க உள்ளதாகவும் அவருடன் பிரியங்கா காந்தியும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றிருந்த சோனியா காந்தி இந்த நடைபயணத்தில் கலந்து கொண்டு முதல் மீண்டும் தொண்டர்களை சந்திக்க உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது