மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல அழகான கோவில்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் 135 ஆண்டுகள் பழமையான வாசவி கன்யகா பரமேஸ்வரி தேவியின் கோவிலில் நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய நிகழ்வு ஒன்று நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. ஆந்திராவில் உள்ள இந்த கோவில் தசராவின் போது தங்கம் மற்றும் பணத்தால் அலங்கரிக்கப்பட்டு பார்ப்பவர்களின் கண்களை பறிக்கும் வகையில் இருக்கிறது. தற்போது இந்த பாரம்பரிய நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இது குறித்து கோவில் கமிட்டியினர் கூறுகையில், “இவையனைத்தும் பொதுப் பங்களிப்பு, பூஜை முடிந்ததும் திருப்பிக் கொடுக்கப்படும். இவை கோவில் அறக்கட்டளைக்கு செல்லாது’’ என தெரிவித்தனர்.