• Tue. Mar 25th, 2025

23.28 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்…

Byகாயத்ரி

Oct 3, 2022

வாட்ஸ் அப் செல்போனில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்றி செயலிஇச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியை 2 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சமூக ஊடகங்களில் வெறுப்புணா்வை தூண்டும் பேச்சுகள், தவறான தகவல்கள், பொய் செய்திகள் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கடுமையான விதிமுறைகள் மத்திய அரசால் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டன. அதன்படி புகார்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வாட்ஸ் ஆஃப் நிறுவனம் மாதம் தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி விதிகளை மீறி செயல்பட்டதாக இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 23.28 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகளை முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.