• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

தந்தை இறந்த சோகத்தில் மகனுக்கும் மாரடைப்பு..,

ByP.Thangapandi

Jun 15, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் பால்ச்சாமி விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

மகன் ராமையா, உத்தப்புரம் 2ஆம் எண் நியாயவிலைக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் சூழலில் பணி நிமித்தமாக சமத்துவபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக தந்தை பால்ச்சாமி இறந்துவிட தந்தை இறந்த செய்தியை அறிந்த ராமையா நேரில் வந்து தந்தையின் உடலை பார்த்து கதறி அழுத போது மயங்கி விழுந்தாகவும், மயங்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்த போது மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து இருவரது உடலையும் தும்மக்குண்டு பெருமாள்பட்டியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று சர்வதேச தந்தையர் தினம் அனுசரித்து வரும் சூழலில் தந்தை இறந்த சோகத்தில் மகனும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.